Makkal Needhi Maiam: திமுக கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகள் பேச்சுவார்த்தை நடைபெற்றது. முன்னதாக திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சி இணைய இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது இது குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படவுள்ளன. அவ்வாறு காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் இடங்களில் ஒரு தொகுதியை மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு கொடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவலை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிடுவார் என கூறப்படுகிறது. மக்கள் நீதி மய்யம் கட்சித் தொடங்கி 7ஆம் ஆண்டுகளாகியுள்ளன.
இந்த நிலையில் இதற்கான விழா வரும் 21ஆம் தேதி ஆழ்வார்பேட்டையில் நடைபெறுகிறது. அன்றைய தினம் கூட்டணி குறித்து கமல்ஹாசன் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.