யூடியூப் டிரெண்டிங்கில் ‘மலைக்கோட்டை வாலிபன்’ டிரைலர்..!

0
149

மோகன்லால் நடித்துள்ள ‘மலைக்கோட்டை வாலிபன்’ திரைப்படத்தின் ‘டிரைலர்’ இன்று வெளியாகி யூடியூப்பில் 1.7 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

மலையாள இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் இயக்கத்தில், மோகன்லால் நடித்திருக்கும் படம் ‘மலைக்கோட்டை வாலிபன்’. ‘ஜல்லிக்கட்டு’, ‘அங்கமாலி டைரிஸ்’, ‘சுருளி’, ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ போன்ற பல படங்களை இயக்கி ரசிகர்களின் கவனத்தை பெற்றவர்.

இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி மற்றும் மோகன்லால் ஆகியோரின் கூட்டணியின் இது முதல் திரைப்படமாகும். ‘மலைக்கோட்டை வாலிபன்’ திரைப்படத்தை எதிர்பார்த்து மோகன்லாலின் ரசிகர்கள் நீண்ட காலமாகக் காத்திருக்கின்றனர்.

அந்த வகையில் மோகன்லாலின் ரசிகர்களுக்கு விருந்தாக ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. வரலாற்றுத் திரைப்படமான ‘மலைக்கோட்டை வாலிபன்’ படம் மிகப்பிரம்மாண்ட படைப்பாக வெளிவரவுள்ளது.

ஹரீஷ் பெராடி, சோனாலி குல்கர்னி, மனோஜ் மோசஸ், டேனிஷ் சைட், கதா நந்தி, மணிகண்டன் ஆச்சாரி என பல முக்கிய நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஜான் & மேரி கிரியேட்டிவ், செஞ்சுரி ஃபிலிம்ஸ், மேக்ஸ்லேப் & சரேகமா ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு பிரசாந்த் பிள்ளை இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் படத்தின் டிரைலர் யூடியூப்பில் வெளியாகி உள்ளது. சுதந்திரத்திற்கு முந்தைய ஆங்கிலேயர்கள் காலகட்டத்தில் நடப்பது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த டிரைலர் தற்போது யூடியூப்பில் டிரெண்டிங் நம்பர் 3-ல் உள்ளது.

‘மலைக்கோட்டை வாலிபன்’ படம் வரும் ஜனவரி 25ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் மோகன்லால் ரசிகர்கள் உற்சாகத்துடன் காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: ‘என்னை மன்னித்துவிடுங்கள்’ – அன்னபூரணி சர்ச்சைக்கு வருத்தம் தெரிவித்த நயன்தாரா!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here