Malaikottai Vaaliban: மோகன்லால் நடித்துள்ள ‘மலைக்கோட்டை வாலிபன்’ திரைப்படத்தின் ‘ராக்’ என்ற இரண்டாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
மலையாள இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் இயக்கத்தில், மோகன்லால் நடித்திருக்கும் படம் ‘மலைக்கோட்டை வாலிபன்’. ‘ஜல்லிக்கட்டு’, ‘அங்கமாலி டைரிஸ்’, ‘சுருளி’, ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ போன்ற பல படங்களை இயக்கி ரசிகர்களின் கவனத்தை பெற்றவர்.
இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி மற்றும் மோகன்லால் ஆகியோரின் கூட்டணியின் இது முதல் திரைப்படமாகும். ‘மலைக்கோட்டை வாலிபன்’ திரைப்படத்தை எதிர்பார்த்து மோகன்லாலின் ரசிகர்கள் நீண்ட காலமாகக் காத்திருக்கின்றனர்.
அந்த வகையில் மோகன்லாலின் ரசிகர்களுக்கு விருந்தாக ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. வரலாற்றுத் திரைப்படமான ‘மலைக்கோட்டை வாலிபன்’ படம் மிகப்பிரம்மாண்ட படைப்பாக வெளிவரவுள்ளது.
ஹரீஷ் பெராடி, சோனாலி குல்கர்னி, மனோஜ் மோசஸ், டேனிஷ் சைட், கதா நந்தி, மணிகண்டன் ஆச்சாரி என பல முக்கிய நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ஜான் & மேரி கிரியேட்டிவ், செஞ்சுரி ஃபிலிம்ஸ், மேக்ஸ்லேப் & சரேகமா ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு பிரசாந்த் பிள்ளை இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் படத்தின் இரண்டாவது பாடலான ‘ராக்’ என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலை நடிகர் மோகன்லால் பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
‘மலைக்கோட்டை வாலிபன்’ திரைப்படம் வரும் ஜனவரி 25ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. திரைப்படத்தை எதிர்பார்த்து மோகன்லாலின் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்தப் படம் மலையாளாம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸாக உள்ளது. இதற்காக அனைத்து மொழிகளிலும் ஒரே நேரத்தில் டப் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Dunki box office collection: ரூ.300 கோடியை கடந்த ‘டன்கி’ வசூல்!