மீண்டும் திரைக்கு வரும் ‘பிரேமம்’ படம்..! மலர் டீச்சரை காண காத்திருக்கும் ரசிகர்கள்!

0
60

மலையாளத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘பிரேமம்’. இந்த படத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடித்திருந்தனர்.

காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த இந்தப் படம் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் சென்னையில் மலையாள பதிப்பில் 100 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடியது.

‘பிரேமம்’ படத்தில் நடித்திருந்த அனைவருக்கும் இது திருப்புமுனை படமாக அமைந்தது. இந்த படத்தில் நடிகை சாய் பல்லவி நடித்திருந்த மலர் டீச்சர் கதாபாத்திரம் தற்போது வரை ரசிகர்களால் விரும்பப்பட்டு வருகிறது.

‘பிரேமம்’ திரைப்படம் தமிழில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி மலையாள சினிமாவிற்கு ஒரு புதிய மார்க்கெட்டை உருவாக்கி கொடுத்தது. இந்த நிலையில் இந்த படம் தற்போது மீண்டும் திரைக்கு வரவுள்ளது என கூறப்படுகிறது.

பிப்ரவரி மாதம் வரும் காதலர் தினத்தை முன்னிட்டு இந்த படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘பிரேமம்’ திரைப்படம் அடுத்த மாதம் 1ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளது.

இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். மேலும், மலர் டீச்சரை மீண்டும் திரையில் பார்க்க ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: ‘நடிகர் திலகம்’ டைட்டிலுக்கு சிவாஜி ரசிகர்கள் எதிர்ப்பு..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here