மறைந்த பிரபல மலையாள பட இயக்குநர் வினுவின் உடல் இன்று தகனம்..

0
93

மலையாளத்தை பல திரைப்படங்களை இயக்கி பிரபலமானவர் வினு (69). இவர், கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் வினு உடல்நலக்குறைவு காரணமாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து, பல நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்த வினு, சிகிச்சைப் பலனின்றி நேற்று (ஜன.10) காலமானார். இந்த அதிர்ச்சித் தகவலைக் கேட்ட மலையாள திரைத்துறையினர் வினுவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

முன்னதாக இயக்குநர் வினுவும், சுரேசும் இணைந்து ‘ஆயுஷ்மான் பவா’, ‘மங்களம் வீட்டில் மனசேஸ்வரி குப்தா’, ‘குஷ்ருதி கட்டு’ உள்ளிட்ட பல மலையாள வெற்றிப்படங்களை இயக்கியுள்ளனர்.

இவர்களது கூட்டணியில், கடசியாக கனிச்சுகுளங்கரையில் சி.பி.ஐ என்ற படம் உருவானது. தொடர்ந்து, கடந்த 20 ஆண்டுகளாக இயக்குநர் வினு கோயம்புத்தூரில் உள்ள சிங்காநல்லூரில் வசித்து வந்தார்.

இந்த நிலையில், இயக்குநர் வினுவின் உடல் இன்று (ஜன.11) கோயம்புத்தூர் நஞ்சுண்டாபுரத்தில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது. அவரது உடலுக்கு திரைப்பிரலங்கள், உறவினர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: மிரட்டலான ‘கேப்டன் மில்லர்’ மேக்கிங் வீடியோ.. ரசிகர்கள் உற்சாகம்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here