விஷ்ணு விஷாலுடன் இணையும் ‘பிரேமலு’ பட நாயகி..!

0
112

Mamitha Baiju: இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் தனது 21ஆவது படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ராம்குமாரும் விஷ்ணு விஷாலும் இணையும் மூன்றாவது திரைப்படமாகும்.

இந்த படத்தை சத்திய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் நடந்து முடிந்த நிலையில் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு கொடக்கானலில் நடைபெற்றது.

இது குறித்த அப்டேட்டை விஷ்ணு விஷால் தனது ‘X’ தளத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டிருந்தார். இந்த படம் ஒரு ரொமாண்டிக் காதல் படம் எனவும் மலைகிராம மக்களின் பின்னணியில் அமைக்கப்பட்ட கற்பனை மற்றும் உணர்ச்சிகரமான கதை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, விஷ்ணு விஷால் படத்தில் மலையாள நடிகை மமிதா பைஜு இணைந்துள்ளதாகவும் அவர்களுக்கான படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக இவர் தமிழில் ‘ரெபெல்’, ‘வணங்கான்’ படங்களில் நடித்திருக்கிறார். இரண்டு படங்களும் ரிலீஸுக்காக காத்திருக்கிறது. மேலும், இவரது நடிப்பில் வெளியான ‘பிரேமலு’ படம் உலக அளவில் மாபெரும் ஹிட்டாகியுள்ளது. இந்த நிலையில், தற்போது தமிழில் மீண்டும் இணைந்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here