‘அல்லு அர்ஜூனை ரொம்ப பிடிக்கும்’ – பிரேமலு நாயகி ஓபன் டாக்..!

0
106

Mamitha Baiju: இயக்குநர் கிரிஷ் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான திரைப்படம் ‘பிரேமலு’. இந்த படத்தில் மமிதா பைஜூ, நஸ்லேன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு விஷ்ணுவிஜய் இசையமைத்திருக்கிறார். இந்த படம் ரிலீஸாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. உலக அளவில் இதுவரை இந்த படம் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளது.

இந்த படம் தற்போது தமிழில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த படத்தின் மூலம் பிரபலமடைந்த மமிதா பைஜூ தொடர்ந்து பல படங்களில் நடிக்க கமிட்டாகி உள்ளார்.

இந்த நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் தனக்கு அல்லு அர்ஜூன் நடித்த படங்கள் மிகவும் பிடிக்கும் என கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், “அல்லு அர்ஜூனை எனக்கு பிடிக்கும். அவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களையும் 10 முறையாவது பார்த்துவிடுவேன்” என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here