Black & White-ல் வெளியாகும் ‘பிரம்மயுகம்’ படம்..! ஷாக்கான ரசிகர்கள்..!

0
75

இயக்குநர் ராகுல் சதாசிவன் இயக்கத்தில் மம்முட்டி நடித்துள்ள திரைப்படம் ‘பிரம்மயுகம்’. இந்த படத்தில் அர்ஜுன் அசோகன், சித்தார்த் பரதன், அமல்டாலிஸ் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்தை ராமச்சந்திர சக்கரவர்த்தி மற்றும் எஸ்.சஷிகாந்த் ஆகியோர் தயாரித்துள்ளனர். மேலும், கிறிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன.

சமீபத்தில் வெளியான ‘பிரம்மயுகம்’ படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. சமீபத்தில் இந்த படத்திற்கு தணிக்கை குழு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது.

இந்த நிலையில், தற்போது படத்தின் புதிய அப்டேட்டை மம்முட்டி தனது ‘X’ தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ‘பிரம்மயுகம்’ திரைப்படம் பிளாக் அண்ட் வொயிட் ஆக வெளிவரவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் ஆவலுடன் படத்திற்கு ரிலீஸுக்காக காத்திருக்கின்றனர். மேலும், இந்த ‘பிரம்மயுகம்’ படம் வரும் பிப்ரவரி 15ஆம் தேதி வெளியாகவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here