டீன்ஸ் படத்திற்காக ஓடோடி வந்த மணிரத்னம்..! நன்றி தெரிவித்த பார்த்திபன்..!

0
103

TEENZ Trailer: இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் தற்போது குழந்தைகளை மையப்படுத்தி டீன்ஸ் (TEENZ) என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்துக்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார்.

இந்த படத்தை பயஸ்கோப் யு.எஸ்.ஏ மற்றும் அகிரா புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. ஆர்.சுதர்சன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். சமீபத்தில் படத்தின் கதாபாத்திரங்கள் குறித்த அப்டேட்டை படக்குழு ஓவ்வொன்றாக வெளியிட்டது.

அதனைத் தொடர்ந்து படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில், தற்போது படத்தின் டிரைலர் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த அதிகாரப்பூர்வமான போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், பார்த்திபன் இயக்கத்தில் வெளியாகவுள்ள ‘டீன்ஸ்’ படத்தில் டிரைலர் ஏப்ரல் 6ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த டிரைலரை இயக்குநர் மணிரத்னம் வெளியிடவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here