மஞ்சு வாரியரின் காரை சோதனை செய்த தேர்தல் அதிகாரிகள்.. ஓடோடி வந்த செல்ஃபி எடுத்த ரசிகர்கள்..

0
100

Manju Warrior: நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து பகுதிகளில் தேர்தல் பறக்குபடை அதிகாரிகள் தீவிர வாகன சோதையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், திருச்சியில் இன்று தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த நடிகை மஞ்சு வாரியரின் காரை அதிகாரிகள் நிறுத்தி சோதனை நடத்தினர். நடிகையின் கார் என்றெல்லாம் பார்க்காமல் அதிகாரிகள் தங்களது பணிகளை செய்தனர். முழுமையான சோதனைக்குப் பிறகு மஞ்சு வாரியரின் காரை எடுத்துச் செல்ல அதிகார்கள் அனுமதித்தனர்.

இதற்கிடையே காரில் மஞ்சி வாரியர் இருப்பதை அறிந்த நெடுஞ்சாலையில் சென்ற ரசிகர்கள் தேர்தல் பறக்குபடை அதிகாரிகள், காவல் துறையினர் யாரையும் மதிக்காமல் நேராக நடிகையை நோக்கி ஓடிச் சென்ற செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.

இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here