தனுஷை வைத்து இயக்கும் சிதம்பரம்..! ரசிகர்கள் கொண்டாட்டம்..!

0
102

Dhanush: தமிழ் சினிமாவின் முன்னனி நடிகரான தனுஷ் தற்போது தனது 50ஆவது படத்தை இயக்கி நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக துஷரா விஜயன் நடிக்கிறார். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் சந்திப் கிஷன், செல்வராகவன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்த படம் ஒரு கேங்க்ஸ்டர் படமாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சமீபத்தில் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

தொடர்ந்து இந்த படத்தில் நடிக்கும் கதாபாத்திரங்களின் புகைப்படத்துடன் கூடிய போஸ்டரை படக்குழு வெளியிட்டது. இந்த நிலையில், தற்போது தனுஷின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

அதன்படி, சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி தமிழ்நாட்டில் சக்கப்போடு போட்டுக்கொண்டிருக்கும் படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. இந்த படத்தின் இயக்குநர் சிதம்பரம் அடுத்ததாக தனுஷை வைத்து புதிய படத்தை இயக்க இருக்கிறார்.

மேலும், இந்த படத்தை கோபுரம் பிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here