ஜி.என்.அன்புச்செழியனை சந்தித்த ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ இயக்குநர்..!

0
125

‘Manjummel Boys’: மலையாள இயக்குநர் சிதம்பரம் பொடுவால் இயக்கத்தில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாஸி உள்ளிட்ட பல இளம் நடிகர்கள் நடித்து மாபெறும் ஹிட்டாகியுள்ள படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’.

இந்த படம் கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி ரிலீஸானது. கமல்ஹாசனின் ‘குணா’ படத்தில் இடம்பெற்ற குகையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள இப்படத்திற்கு தமிழ்நாட்டில் ஹவுஸ் ஃபுல்லாகி ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். மேலும், இந்தப்படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கமல்ஹாசனின் தீவிர ரசிகரான இயக்குநர் சிதம்பரத்தையும் படக்குழுவினரையும் கமல்ஹாசன் நேரில் அழைத்து பாராட்டினார். அதனைத் தொடர்ந்து, பல்வேறு நடிகர்கள் இயக்குநர் சிதம்பரத்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றர்.

அந்த வகையில் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ இயக்குநர் சிதம்பரத்திற்கு தற்போது கோபுரம் ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர் ஜி.என்.அன்புச்செழியன் வாழ்த்து கூறியுள்ளார்

இது தொடர்பான புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தொடர்ந்து நடிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளையும், பாராட்டையும் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here