டிஸ்னியில் வெளியாகும் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’.. ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

0
162

Manjummel boys: மலையாள இயக்குநர் சிதம்பரம் பொடுவால் இயக்கத்தில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாஸி உள்ளிட்ட பல இளம் நடிகர்கள் நடித்து மாபெறும் ஹிட்டாகியுள்ள படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’.

இந்த படம் கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி ரிலீஸானது. கமல்ஹாசனின் ‘குணா’ படத்தில் இடம்பெற்ற குகையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள இப்படத்திற்கு தமிழ்நாட்டில் ஹவுஸ் ஃபுல்லாகி ஓடிக்கொண்டிருக்கிறது.

இதுவரை 220 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் 220 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்த முதல் மலையாள படம் என்ற பட்டத்தைப் பெற்றுள்ளது. கேரளா, தமிழ்நாடை தொடர்ந்து தெலங்கானாவிலும் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ ரிலீஸானது.

நாளுக்கு நாள் அங்கு திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் தற்போது படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியான போஸ்டரில், ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படம் வருகிற மே 3ஆம் தேதி பிரபல ஓடிடி தளமான டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. திரையரங்குகளில் கிடைத்த வரவேற்பு போலவே ஓடிடி தளத்திலும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here