24 ஆண்டு திருமண வாழ்க்கை – கணவருடன் விவகாரத்து பெற்ற நடிகை..

0
135

ManjuPillai: தமிழ் சினிமாவில் பிரியதர்ஷன் இயக்கிய ‘சினேகிதியே’ மற்றும் கமல்ஹாசன் நடித்த ‘மன்மதன் அம்பு’ ஆகிய படங்களின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை மஞ்சு பிள்ளை.

இவர், பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். மேலும், மஞ்சு பிள்ளை சினிமா ஒளிப்பதிவாளரான சுஜித் வாசுதேவை 2000ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்த நிலையில் தற்போது இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக பிரிந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகின்றன.

இருந்தபோதிலும் இதற்கு இருவரும் விளக்கம் அளிக்காமலையே இருந்தனர். ஆனால், தற்போது இருவரும் விவாகரத்துப் பெற்று பிரிந்துவிட்டது உறுதியாகியுள்ளது.

இது குறித்து சுஜித் வாசுதேவ் கூறுகையில், “நானும், மஞ்சு பிள்ளையும் பிரிந்து விட்டோம். விவாகரத்து பெற முடிவு செய்துள்ளோம். அதற்கான நடவடிக்கைகளில் தற்போது உள்ளோம். ஆனால், தொடர்ந்து நாங்கள் நட்புறவுடன் இருப்போம்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here