ரீ ரிலீஸாகும் மங்காத்தா.. ரசிகர்களுக்கு பிறந்த நாள் ட்ரீட் கொடுத்த அஜித்..

0
139

Mankatha: வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான படம் ‘மங்காத்தா’. அஜித்தின் 50ஆவது படமான ‘மங்காத்தா’ மெகா ஹிட்டானது. இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிசா நடித்திருப்பார். மேலும், அர்ஜுன், லக்ஷ்மி ராய், அஞ்சலி , ஆண்ட்ரியா ஜெரமையா ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார். சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்ய தயாநிதி அழகிரி தயாரிக்கின்றார். இந்த நிலையில், தற்போது இந்த படம் ரீ ரிலீஸாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

அஜித்தின் பிறந்த நாளான மே 1ஆம் தேதி ‘மங்காத்தா’ படம் ரீ ரிலீஸாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்த போஸ்டர் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் படம் 2007ஆம் ஆண்டு ரிலீஸான பில்லா பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here