‘இந்திய ஜனநாயக புலிகள் இயக்கம்’..! கட்சி பெயரை மாற்றிய மன்சூர் அலிகான்..!

0
127

நடிகர் மன்சூர் அலிகான் ஏற்கனவே ‘தமிழ் தேசிய புலிகள்’ என்ற பெயரில் கட்சி தொடங்கி நடத்தி வந்தார். இந்த நிலையில், தற்போது அந்த கட்சியின் பெயரை ‘இந்திய ஜனநாயக புலிகள்’ என மாற்றியுள்ளார்.

மேலும், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவும் நடிகர் மன்சூர் அலிகான் முடிவு செய்துள்ளார். இது குறித்து மன்சூர் அலிகான் கூறும்போது, ‘தமிழ் தேசிய புலிகள் என்ற பெயரில் நான் ஏற்கனவே தொடங்கிய அமைப்பை தேசிய அளவில் எடுத்து செல்ல இருக்கிறேன்.

இதற்காக, ‘தமிழ் தேசிய புலிகள்’ என்ற பெயரை ‘இந்திய ஜனநாயக புலிகள் இயக்கம்’ என்று மாற்றி இருக்கிறேன். எளியவர்களை பதவியில் அமர்த்துவதும், ஆட்சி அதிகாரத்தில் அமர்த்துவதும், பெரியாரின் சித்தாந்தங்களை இந்தியா முழுவதும் பரப்புவதும்தான் எங்கள் கட்சியின் நோக்கம். அதற்காக தீவிரமாக பயணிக்க இருக்கிறோம்.

இதற்காக இந்தியா முழுவதும் கட்சிக்கு பொறுப்பாளர்களை நியமிக்கவுள்ளோம். எங்களது அரசியல் இனி தீவிரமாக இருக்கும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் நேரடியாக போட்டியிடுவதா அல்லது வேறு எந்த கட்சிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதா என்பது குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்யவுள்ளோம்’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here