Mansoor Alikhan: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இதனால், அனைத்துக் கட்சிகளும் தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு போன்ற பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், தற்போது இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவர் மன்சூர் அலிகான், அதிமுக-விடம் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையானது சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்திற்கு நடைபெற்றது.
அப்போது அங்கிருந்த அதிமுக நிர்வாகிகள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், பெஞ்சமின் ஆகியோரை சந்தித்த மன்சூர் அலிகான் அதிமுக கூட்டணியில் இணைவது குறித்த பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் தனக்கு அதிமுக கூட்டணியில் ஒரு தொகுதி ஒதுக்க வேண்டும் என மன்சூர் அலிகான் கோரிக்கை வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.