நாடு முழுவதும் குடியரசு தின விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் நடிகர் மன்சூர் அலிகானும் கொடியேற்றி வைத்து குடியரசு தின விழாவைக் கொண்டாடினார்.
குடியரசு தினத்தை முன்னிட்டு தனது அலுவலகத்தில் மன்சூர் அலிகான் தேசியக் கொடியை ஏற்றினார். அப்போது, அங்கிருந்தவர்கள் தேசிய கொடி தலைகீழாக இருப்பதாக தெரிவித்தனர்.
உடனே இதனைக் கண்டு சுதாரித்துக் கொண்ட மன்சூர் அலிகான் கொடியை கீழே இறக்கி மீண்டும் சரியாக ஏற்றினார். இதனால், அங்கு சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைராக பரவி வருகிறது.