மதுபாட்டிலில் வழக்கறிஞர் பேட்ஜ்..! ‘சரக்கு’ பட வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

0
99

நடிகர் மன்சூர் அலிகான் வழக்கறிஞராக நடித்திருந்த திரைபடம் ‘சரக்கு’. இந்தப் படத்தை இயக்குநர் ஜெயக்குமார் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் வலினா பிரின்ஸ், மொட்டை ராஜேந்திரன், நாஞ்சில் சம்பத், கோதண்டம், கிங்ஸ்லி, சேசு, தீனா, ரவி மரியா, லொள்ளுசபா மனோகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படம் கடந்த மாதம் 29ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் போஸ்டரில் மதுபாட்டிலின் கழுத்து பகுதியில் வழக்கறிஞர்கள் அணியும் கழுத்துப்பட்டை இடம்பெற்று இருந்தது.

இதற்கு வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்தப் படத்திற்கு எதிராக சென்னை நகர் உரிமையியல் சிவில் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணை நேற்று (ஜன.04) நீதிபதி சுந்தரராஜன் அமர்வில் வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, படத்தின் போஸ்டரில் இடம்பெற்றுள்ள கழுத்துப்பட்டையை நீக்க கோரி படக்குழுவினருக்கு உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: ‘இசைஞானி என்று அழைப்பதற்கு நான் தகுதியானவனா?’ – இளையராஜா பேச்சு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here