அனிமல் படத்தில் நானே நடித்திருக்கலாம்.. இப்போ ஃபீல் பண்ணும் பாலிவுட் நடிகை..

0
94

Manushi Chhillar: இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடித்த படம் அனிமல். இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

இந்த படத்தில் அனில் கபூர், பாபி தியோல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படம் பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகியாது. இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் பெற்று வருகிறது. இந்த நிலையிலும் இந்த படம் ரூ1000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

இதற்கிடையே இந்த படம் கடந்த 26ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. ஓடிடி வெளியீட்டிற்கு பிறகு இந்த படம் பல்வேறு விமர்சனங்களில் சிக்கியது. பலரும் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

முன்னதாக இந்தப் படத்தில் பிரபல பாலிவுட் நடிகை மானுஷி சில்லர் நடிப்பதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது இந்த அனிமல் படம் குறித்து மானுஷி சில்லர் கூறுகையில், ‘எனக்கு சந்தீப் ரெட்டி வங்காவை பிடிக்கும்.

அந்த படத்தில் உள்ள ராஷ்மிகா மந்தனா மற்றும் திரிப்தி டிம்ரியின் கதாபாத்திரங்கள் மிகவும் நன்றாக சுவாரசியமாக இருந்தன. இந்த இரண்டில் எனக்கு ராஷ்மிகா காதாபாத்திரம் பிடித்திருந்தது. வதந்திகள் உண்மையாக இருந்திருந்தால் ராஷ்மிகா கதாபாத்திரத்தில் நான் நடித்திருப்பேன்” என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here