போலீஸ் விசாரணையில் ஆண்ட்ரியா – பரபரப்பாக வெளியான ‘மனுஷி’ டிரைலர்.. ரசிகர்கள் வரவேற்பு..

0
135

Manushi Trailer : ‘அறம்’ படத்தை இயக்கிய கோபி நயனார் தற்போது நடிகை ஆண்ட்ரியாவை வைத்து ‘மனுஷி’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை இயக்குநர் வெற்றிமாறன் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.

சமீபத்தில் ஆண்ட்ரியாவின் பிறந்த நாளன்று இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த நிலையில், இன்று (ஏப்ரல் 17) ‘மனுஷி’ படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால் படம் முழுவதும் இவரை சுற்றியே நகர்வது போல அமைந்துள்ளது. மேலும், ஒரு விசாரணையில் கதாநாயகி எப்படியெல்லாம் கொடுமைகளை அனுபவிக்கிறாள் என்பது இந்த டிரைலர் மூலம் விளக்கப்பட்டுள்ளது.

இந்த படமும் ’அறம்’ படத்தைப் போல மிகவும் அழுத்தமான கதைக்களம் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். தற்போது வெளியாகியுள்ள இந்த டிரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here