‘இவனுங்கலாம் School Students-ஆ?’ – ப்ரோமோ வெளியிட்ட!

0
93

‘Marakkuma Nenjam’: இயக்குநர் ராகோ.யோகேந்திரன் இயக்கத்தில் விஜய் டிவி தொகுப்பாளராக இருக்கும் ரக்‌ஷன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘மறக்குமா நெஞ்சம்’. இந்த படத்தில் ரக்‌ஷனுடன் சேர்ந்து தீனாவும் நடித்திருக்கிறார்.

முன்னதாக ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான ரக்‌ஷனுக்கு அடுத்ததாக பட வாய்ப்புகள் வராமல் இருந்தது. இந்த நிலையில் தற்போது ‘மறக்குமா நெஞ்சம்’ படத்தின் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

‘மறக்குமா நெஞ்சம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சென்ற ஆண்டு மே மாதம் வெளியானது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் பல்வேறு காரணங்களால் படம் வெளியாகவில்லை.

இருப்பினும் படத்தின் ட்ரெய்லர் சென்ற ஆண்டு நவம்பர் மாதம் வெளியானது. ட்ரெய்லர் மூலம் இப்படம் ஒரு பள்ளி வாழ்க்கைப் பற்றிய படம் என்பது தெரியவந்தது.

இந்தப் படத்தை ரகு எள்ளுரு தயாரித்துள்ளார். படத்திற்கு சச்சின் வாரியர் இசையமைத்திருக்கிறார் மற்றும் தாமரை பாடல் வரிகளை எழுதியிருக்கிறார். சமீபத்தில் வெளியாகிய ‘மறக்குமா நெஞ்சம்’ படத்தின் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்த நிலையில், தற்போது ‘மறக்குமா நெஞ்சம்’ படத்தில் இருந்து ‘இவனுங்கலாம் School Students-ஆ?’ என்ற பெயரில் ப்ரோமோ வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து வருகின்றனர். ‘மறக்குமா நெஞ்சம்’ படம் வரும் பிப்ரவரி 2ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

இதையும் படிங்க: பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ‘பக்ஷக்’ டிரைலர்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here