மாஸ்டர் மகேந்திரன் நடிக்கும் புதிய படம்..! பூஜையுடன் தொடக்கம்..!

0
70

Master Mahendran: இயக்குநர் நவின் கணேஷ் இயக்கத்தில் நடிகர் மாஸ்டர் மகேந்திரன் கதாநாயகனாக புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ஜீவிதா கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் சார்லி, கும்கி அஸ்வின், புகழ், சரத் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு சாம் சி.எஸ்-க்கு இசை ஏற்பாட்டாளராக இருந்த அபிஷேக் ஏ.ஆர் இசையமைக்கிறார்.

சனா ஸ்டுடியோஸ் வழங்க முத்து, சந்தோஷ் சிவன் மற்றும் ரவி இந்தப் படத்தை இணைந்து தயாரிக்கின்றனர். ரவிவர்மா ஒளிப்பதிவு செய்கிறார். தீபக் படத்தொகுப்பு செய்கிறார்.

இந்தப் படம், சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் குறுகிய காலத்திலேயே படமாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்தை சீமான், சரண், அருண்ராஜா காமராஜ் மற்றும் கல்யாண் உள்ளிட்ட இயக்குநர்கள் தொடங்கி வைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here