விஜய் தேவரகொண்டா படத்தில் இணைந்த மீனாட்சி சவுத்ரி!

0
159

நடிகர் விஜய் தேவரகொண்டாவின் 12ஆவது படத்தை ‘ஜெர்ஸி’ பட இயக்குநர் கவுதம் தின்னூரி இயக்குகிறார். இந்த படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும், இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை ஸ்ரீலீலா நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், ஒரு சில காரணங்களால் ஸ்ரீ லீலா படத்தில் இருந்து வெளியேறினார்.

இந்த நிலையில், இந்த படத்தில் அவருக்கு ஸ்ரீ லீலாவுக்குப் பதிலாக கதாநாயகியாக நடிக்க மீனாட்சி சவுத்ரி உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

மேலும், இவர் இல்லாமல் அனிமல் படத்தின் மூலம் பிரபலமான நடிகை த்ரிப்தி திம்ரி உடனும் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here