‘MeiAzhagan’: தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர்களில் ஒருவர் நடிகர் கார்த்தி. வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவரது நடிப்பில் இதுவரை வெளியான திரைப்படங்கள் ஒன்றுடன் ஒன்று ஒத்துப்போகாத நிலையில் மிகவும் கவணத்துடன் நடித்து வருகிறார்.
தனக்கென ஒரு ஸ்டைலை வைத்திருக்கும் கார்த்திக்கு பின்னல் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவரது நடிப்பில் ராஜுமுருகன் இயக்கத்தில் வெளியான ‘ஜப்பான்’ தீபாவளிக்கு வெளியானது. ஆனால், அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு ரீச் ஆகவில்லை.
இதனைத் தொடர்ந்து தற்போது நடிகர் கார்த்தி இரண்டு படங்களில் நடித்து வருகிறார். ‘கார்த்தி 26’ என்று அழைக்கப்படும் படத்தை நலன் குமாரசாமி இயக்கி வருகிறார். ‘கார்த்தி 27’ என்று அழைக்கப்படும் படத்தை ‘96’ படத்தின் இயக்குநர் பிரேம்குமார் இயக்குகிறார்.
இந்த‘கார்த்தி 27’ படத்திற்கு ‘மெய்யழகன்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அரவிந்த்சாமி, ராஜ்கிரன் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்தை 2D நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தற்போது கார்தி நடிக்கும் பகுதிக்கான படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது ‘மெய்யழகன்’ படத்தின் பூஜை வீடியோவை 2D நிறுவனம் தனது ‘X’ தளத்தில் வெளியிட்டுள்ளது. அதில், படத்தில் நடிக்கும் நடிகர்கள், சிவகுமார், சூர்யா, கார்த்தி, ராஜ்கிரன், அரவிந்த்சாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த பூஜை கிளிம்ப்ஸ் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. தொடர்ந்து, இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்டுகள் விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.