வெளியானது ‘Merry Christmas’ படத்தின் புதிய பாடல்..!

0
93

‘Merry Christmas’: விஜய் சேதுபதி மற்றும் கத்ரினா கைஃப் நடித்து பொங்கல் அன்று திரைக்கு வரவுள்ள ‘மெரி கிறிஸ்துமஸ்’ படத்தின் புதிய பாடல் ஒன்று வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதி, கத்ரினா கைஃப் நடித்துள்ள திரைப்படம் ‘மெரி கிறிஸ்துமஸ்’. இந்த படத்தை டிப்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் மேட்ச்பாக்ஸ் பிக்சர்ஸ் (Matchbox pictures) இணைந்து தயாரித்து வழங்கவுள்ளது. ஜானி கதார், பத்லாபூர் மற்றும் அந்தாதுன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஶ்ரீராம் ராகவன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

இது இவருடைய முதல் தமிழ்ப் படம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல கத்ரினா கைஃப் முதல்முறையாக தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். ஶ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளிவந்த படங்களில் இருந்து இந்த படம் சற்று வேறுபட்டு, வித்தியாசமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

‘மெரி கிறிஸ்துமஸ்’ இரண்டு மொழிகளில் வெவ்வேறு துணை நடிகர்களுடன் படமாக்கப்பட்டுள்ளது. தமிழ்ப் பதிப்பில் ராதிகா சரத்குமார், சண்முகராஜா, கவின் ஜெய் பாபு மற்றும் ராஜேஷ் வில்லியம்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

அதே நேரத்தில் அதே வேடங்களில் இந்தி பதிப்பில் சஞ்சய் கபூர், வினய் பதக், பிரதிமா கண்ணன், டின்னு ஆனந்த் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இது நிச்சயமாக உலகெங்கிலும் உள்ள ரசிகர்களுக்கு கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தற்போது ‘மெரி கிறிஸ்துமஸ்’ படத்தில் இருந்து புதிய பாடலான ‘காணாத காதல்’ என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பாடலை யுகபாரதி எழுதி, கார்த்திக் பாடியிருக்கிறார். மேலும், ‘மெரி கிறிஸ்துமஸ்’ படம் நாளை (ஜன.12) ரிலீஸ் ஆகவுள்ளதால் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: வெளியானது ‘புளூ ஸ்டார்’ படத்தின் டிரைலர்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here