‘Mission Chapter 1’ படத்தின் செகண்ட் சிங்கிளான ‘அச்சமே அச்சமே’ பாடல் வெளியீடு..!

0
110

‘Mission Chapter 1’ : நடிகர் அருண் விஜய் நடித்து பொங்கலுக்கு வெளிவரவுள்ள ‘Mission Chapter 1’ படத்தின் செகண்ட் சிங்கிள் இன்று (ஜன.09) வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இயக்குநர் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘Mission Chapter 1 அச்சம் என்பது இல்லையே’. இப்படத்தில், நடிகை எமி ஜாக்சன் மற்றும் நிமிஷா சஜயன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஸ்ரீ சீரடி சாய் மூவிஸ் மற்றும் நியூ மார்ச் ஃபர்ஸ்ட் பிக்சர்ஸ் இணைந்து வழங்கும் மிஷன் சாப்டர் 1 திரைப்படத்தில் சந்திப்.K.விஜய் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும், இந்த படத்தை ஆண்டனி படத்தொகுப்பு செய்கிறார். இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

மேலும், அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகி வரும் இந்த படத்தில் ஸ்டண்ட் சில்வா ஸ்டண்ட் இயக்குநராக பணியாற்றியுள்ளார். இந்த படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த நிலையில், தற்போது படத்தின் செகண்ட் சிங்கிள் ‘அச்சமே அச்சமே’ என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படம் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் வரும் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது.

இதையும் படிங்க: ‘நம்ம தேர் திருவிழாவுக்கு அலப்பற கெளப்ப நேரம் வந்தாச்சு’ – ‘லால் சலாம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here