‘Mission Chapter 1’ படத்திற்கு நல்ல வரவேற்பு.. ஈஷா ஆதியோகியை தரிசித்த அருண் விஜய்.!

0
93

இயக்குநர் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘Mission Chapter 1 அச்சம் என்பது இல்லையே’. இப்படத்தில், நடிகை எமி ஜாக்சன் மற்றும் நிமிஷா சஜயன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஸ்ரீ சீரடி சாய் மூவிஸ் மற்றும் நியூ மார்ச் ஃபர்ஸ்ட் பிக்சர்ஸ் இணைந்து வழங்கும் மிஷன் சாப்டர் 1 திரைப்படத்தில் சந்திப்.K.விஜய் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும், இந்த படத்தை ஆண்டனி படத்தொகுப்பு செய்கிறார். இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இந்த படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், படத்தை பார்த்த ரசிகர்கள் ஆக்சன் காட்சிகள் சிறப்பாக உள்ளதாக தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ‘Mission Chapter 1’ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் கோயம்புத்தூர் ஈஷா யோகா மையத்திற்கு படக்குழுவினர் சென்று தரிசனம் செய்துள்ளனர்.

இது தொடர்பான புகைப்படத்தை நடிகர் அருண் விஜய் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அவர் அந்த பதிவில், “ஒரு தெய்வீக தொடக்கம்… ‘அச்சம் என்பது இல்லையே – மிஷன் சாப்டர் 1’ படத்திற்கு கொடுத்த வரவேற்புக்கு நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: நயன்தாராவுக்கு எதிராக மராட்டியத்தில் மேலும் ஒரு வழக்கு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here