‘Mission Chapter 1’ படத்திற்கு வாழ்த்து கூறி கார்த்திக் சுப்புராஜ் ட்வீட்..!

0
105

இயக்குநர் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘Mission Chapter 1 அச்சம் என்பது இல்லையே’. இப்படத்தில், நடிகை எமி ஜாக்சன் மற்றும் நிமிஷா சஜயன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஸ்ரீ சீரடி சாய் மூவிஸ் மற்றும் நியூ மார்ச் ஃபர்ஸ்ட் பிக்சர்ஸ் இணைந்து வழங்கும் மிஷன் சாப்டர் 1 திரைப்படத்தில் சந்திப்.K.விஜய் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும், இந்த படத்தை ஆண்டனி படத்தொகுப்பு செய்கிறார். இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

மேலும், அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகி வரும் இந்த படத்தில் ஸ்டண்ட் சில்வா ஸ்டண்ட் இயக்குநராக பணியாற்றியுள்ளார். இந்த படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.

‘Mission Chapter 1’ திரைப்படம் இன்று வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ‘Mission Chapter 1’ திரைப்படத்தின் வெற்றிக்கு தனது பாராட்டைத் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று மட்டும் நான்கு படங்கள் வெளியானது. ‘Mission Chapter 1’, ‘அயலான்’, ‘மெரி கிறிஸ்துமஸ்’, ‘கேப்டன் மில்லர்’ ஆகிய நான்கு படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதையும் படிங்க: மருத்துவத்திற்கு இலவச ஆட்டோ.. பாலாவின் சேவைக்கு பொதுமக்கள் பாராட்டு..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here