இயக்குநர் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘Mission Chapter 1 அச்சம் என்பது இல்லையே’. இப்படத்தில், நடிகை எமி ஜாக்சன் மற்றும் நிமிஷா சஜயன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஸ்ரீ சீரடி சாய் மூவிஸ் மற்றும் நியூ மார்ச் ஃபர்ஸ்ட் பிக்சர்ஸ் இணைந்து வழங்கும் மிஷன் சாப்டர் 1 திரைப்படத்தில் சந்திப்.K.விஜய் ஒளிப்பதிவு செய்தார். மேலும், இந்த படத்தை ஆண்டனி படத்தொகுப்பு செய்தார். இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்தார். இந்த படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தப் படம் ஜனவரி 12ஆம் தேதி வெளியானது. தொடர்ந்து இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தை பார்த்த ரசிகர்கள் ஆக்சன் காட்சிகள் சிறப்பாக உள்ளதாக தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வந்தனர்.
தொடர்ந்து, ‘Mission Chapter 1’ படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பிப்ரவரி 16ஆம் தேதி வெளியானது. இந்த நிலையில், தற்போது இந்த படத்திலுள்ள ‘அச்சமே அச்சமே’ என்ற பாடலின் முழு நீல வீடியோ பாடல் இன்று வெளியாகியுள்ளது.