Netflix-ல் ரிலீஸ் ஆகும் ‘Mission Chapter 1’.. தேதியை அறிவித்த படக்குழு..!

0
296

Mission Chapter 1’: இயக்குநர் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘Mission Chapter 1 அச்சம் என்பது இல்லையே’. இப்படத்தில், நடிகை எமி ஜாக்சன் மற்றும் நிமிஷா சஜயன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஸ்ரீ சீரடி சாய் மூவிஸ் மற்றும் நியூ மார்ச் ஃபர்ஸ்ட் பிக்சர்ஸ் இணைந்து வழங்கும் மிஷன் சாப்டர் 1 திரைப்படத்தில் சந்திப்.K.விஜய் ஒளிப்பதிவு செய்தார். மேலும், இந்த படத்தை ஆண்டனி படத்தொகுப்பு செய்தார். இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்தார். இந்த படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தப் படம் ஜனவரி 12ஆம் தேதி வெளியானது. தொடர்ந்து இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தை பார்த்த ரசிகர்கள் ஆக்சன் காட்சிகள் சிறப்பாக உள்ளதாக தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வந்தனர்.

தொடர்ந்து, நடிகர் அருண் விஜய் மற்றும் இயக்குநர் விஜய் ஆகியோர் பல்வேறு திரையரங்குகளுக்கு நேரடியாக சென்று ரசிகர்களிடம் கருத்துக்களை கேட்டு வந்தனர். தொடர்ந்து பல்வேறு இடங்களில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது.

இந்த நிலையில் படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி ‘Mission Chapter 1’ படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் பிப்ரவரி 16ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வமான போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

படம் ரிலீஸ் ஆகி 25 நாட்களுக்கு மேல் ஆன நிலையிலும் இந்த படத்திற்கான ஹைப் குறையவில்லை என ரசிகர்கள் கூறி வருகின்றனர். தொடர்ந்து, இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக ரசிகர்களுக்கு மேலும் உற்சாகத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here