வெளியானது அருண் விஜய் நடிக்கும் ‘Mission Chapter 1’ டிரைலர்!

0
66

‘Mission Chapter 1’: நடிகர் அருண் விஜய் நடித்து பொங்கலுக்கு வெளிவரவுள்ள ‘Mission Chapter 1 அச்சம் என்பது இல்லையே’ படத்தின் டிரைலர் இன்று (ஜன.05) வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இயக்குநர் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘Mission Chapter 1 அச்சம் என்பது இல்லையே’. இப்படத்தில், நடிகை எமி ஜாக்சன் மற்றும் நிமிஷா சஜயன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஸ்ரீ சீரடி சாய் மூவிஸ் மற்றும் நியூ மார்ச் ஃபர்ஸ்ட் பிக்சர்ஸ் இணைந்து வழங்கும் மிஷன் சாப்டர் 1 திரைப்படத்தில் சந்திப்.K.விஜய் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும், இந்த படத்தை ஆண்டனி படத்தொகுப்பு செய்கிறார். இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

மேலும், அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகி வரும் இந்த படத்தில் ஸ்டண்ட் சில்வா ஸ்டண்ட் இயக்குநராக பணியாற்றியுள்ளார். இந்த படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிலையில், தற்போது படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படம் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் வரும் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது.

பொங்கல் தினத்தன்று ஏற்கனே அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘கேப்டன் மில்லர்’, சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அயலான்’, விஜய் சேதுபதி, காத்ரீனா கைஃப் நடித்துள்ள ‘மெரி கிறிஸ்துமஸ்’ ஆகிய படங்கள் திரைக்கு வரவுள்ள நிலையில் இந்த போட்டியில் தற்போது Mission Chapter 1 படமும் மோதவுள்ளது.

இதையும் படிங்க: ‘கேப்டன் செய்ததை நானும் செய்வேன்’..! விஜயகாந்த் சமாதி முன் புகழ் எடுத்த சபதம்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here