‘தமிழர்களை இணைக்கும் அடையாளம் தமிழ்’ – முதலமைச்சர் ஸ்டாலின்..!

0
126

‘International Mother Language Day’: சர்வதேச தாய் மொழி தினம் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இன்று உலகம் முழுவதும் சர்வதேச தாய் மொழி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் ‘தமிழர்களை இணைக்கும் பேராற்றல் கொண்ட ஒற்றை அடையாளம் தமிழ்’ என கூறி தனது ‘X’ தளத்தில் பதிவு இன்றை வெளியிட்டார்.

அந்த பதிவில், “உலகெங்கும் வாழும் தமிழர்களை அனைத்து வேறுபாடுகளையும் அறுத்தெறிந்து இணைக்கும் பேராற்றல் கொண்ட அடையாளம் தமிழ்!

அரசு ஆவணங்களில், மேடைச் சொற்பொழிவுகளில், பெயர்சூட்டலில், திரைப்பட உரையாடல்களில் என அனைத்துத் தளங்களிலும் தமிழை பிறமொழி ஆதிக்கத்தில் இருந்து மீட்டு அதன் பழம்பெருமையை நிலை நாட்டிய வரலாற்றுக்குச் சொந்தக்காரர்கள் நாம்..!

அத்தகைய இயக்கத்தின் வழிவந்த நமது அரசின் சார்பில், உலகத் தாய்மொழி நாளான இன்று, தமிழ்நாடு சட்டப்பேரவையில் அன்னைத்தமிழை எந்நாளும் காத்து வளர்த்திட அனைத்து உறுப்பினர்களும் உறுதியேற்றோம்!.” என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here