ராகுல்காந்தி ‘பாரத ஒற்றுமை நீதி யாத்திரை’ என்ற பெயரில் தனது யாத்திரையை கடந்த ஜனவரி 14ஆம் தேதி மணிப்பூரில் தொடங்கினார்.
இந்த யாத்திரையானது தொடர்ந்து பல்வேறு மாநிலங்களைச் சந்தித்து வரும் நிலையில் இந்த யாத்திரை இன்றுடன் (மார்ச்.16) முடிவடைந்தது.
ராகுல்காந்தி தனது யாத்திரையை மும்பை தாதரில் உள்ள சட்டமேதை அம்பேத்கரின் நினைவிடமான சைத்யபூமியில் இந்த யாத்திரையை நிறைவு செய்தார்.
அதனைத் தொடர்ந்து, இன்று மாலை 5 மணிக்கு மும்பை சிவாஜி பார்க்கில் INDIA கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தை காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ளது. இந்த கூட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்றுப் பேசினார்.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது, பேசிய அவர், ‘மக்களை பிளவுபடுத்தும் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றவேண்டும்
பிரதமரின் பொய் பரப்புரையை INDIA கூட்டணி கட்டாயம் முறியடிக்கும். பாஜகவால் அழிக்கப்பட்ட இந்தியாவை மீட்டு எடுப்பதற்காகவே ராகுல் காந்தி இந்த யாத்திரையை மேற்கொண்டார்” என பேசினார்.