‘லால் சலாம்’ படத்தில் பல காட்சிகள் நீக்கம்..! தணிக்கை குழு கூறும் காரணங்கள் தெரியுமா?..

0
83

‘Lal Salaam’: நடிகர் ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘லால் சலாம்’. இந்தப் படத்தில் நடிகர் விக்ராந்த், நடிகர் விஷ்ணு விஷால் இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

முக்கியமாக ‘லால் சலாம்’ திரைப்படத்தில் ‘மொய்தீன் பாய்’ என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நிரோஷா நடித்துள்ளார்.

கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாம் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். லைகா நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் படத்தைத் தயாரித்துள்ளார். ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழ்நாட்டில் படத்தை வெளியிடுகிறது.

‘லால் சலாம்’ திரைப்படம் பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி வெளியாகவுள்ளதால் புரமோஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், படத்தை பார்த்த தணிக்கை குழு படத்திற்கு ‘U/A’ சான்றிதழ் வழங்கி உள்ளது.

அதோடு படத்தில் இருந்த 2 நிமிடம் 6 விநாடி காட்சிகளை தணிக்கை குழு நீக்கியுள்ளது. அதோடு ஒரு நிமிடம் 49 விநாடி காட்சிகளை மாற்றம் செய்யவும் அறிவுருத்தியுள்ளது.

மேலும், இந்த படத்தில் பல இடங்களில் கெட்ட வார்த்தைகள் இடம் பெற்றிருப்பதாக கூறி அதனையும் நீக்க உத்தரவிட்டது. மத ரீதியான வசனங்களையும் நீக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இந்த படத்தின் நீளம் மொத்தம் 152 நிமிடம், 38 விநாடிகள் என்று சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்ந்தாக ‘லால் சலாம்’ திரைப்படம் குவைத்தில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மதம் சார்ந்து வெளியாகும் படங்களை குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக் கொண்ட படங்களை குவைத் நாட்டில் திரையிடும் விஷயத்தில் அந்நாடு மிகுந்த கவனத்துடன் இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here