‘Mr.Zoo Keeper’ : தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘குக்கு வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகர் புகழ். இவர், பல்வேறு படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில், கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியா ‘1947’ படத்தில் புகழின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.
இந்த நிலையில், நடிகர் புகழ் ‘Mr.Zoo Keeper’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்த படத்தை ஜே.சுரேஷ் இயக்குகிறார். இந்த படத்தில் Zoo Keeper-ஆக புகழ் நடித்திருப்பதால், விலங்குகளுக்கு கிராபிக்ஸ் பயன்படுத்தாமல் உண்மையான காட்டு விலங்குகளுடன் புகழ் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த படத்தை J4 ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்த நிலையில் தற்போது ‘Mr.Zoo Keeper’ படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது. இந்த டிரைலரை இயக்குநர் வெங்கட் பிரபு தனது ‘X’ தளத்தில் வெளியிட்டார். தொடர்ந்து யூடியூப்பில் யுவனுடைய சேனலில் வெளியாகியுள்ளது.
யூடியூப்பில் வெளியான இந்த டிரைலருக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர். மேலும், டிரெண்டிங்கில் நம்பர் 6ஆவது இடத்தில் உள்ளது. தொடர்ந்து, இந்த படத்தின் ரிலீஸ் குறித்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: Netflix-ல் வெளியாக இருக்கும் ‘குண்டூர் காரம்’..! ரிலீஸ் தேதி அறிவிப்பு..!