‘இதனால் தான் நிறைய படங்களை தவறவிட்டேன்’ – மிருணாள் தாக்கூர் கூறிய காரணம் என்ன?..

0
152

Mrunal Thakur: இந்திய படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை மிருணாள் தாக்கூர். முக்கியமாக இவரது நடிப்பில் வெளியான ‘சீதா ராமம்’ படம் இந்திய அளவில் நல்ல வரவேற்பை பெற்றது. 

சமீபத்தில் இவர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ‘பேமிலி ஸ்டார்’ படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்த 5ஆம் தேதி ரிலீஸாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  

இந்த நிலையில், சினிமாவில் தான், பல படங்களை தவறவிட்டதற்கான காரணங்களை கூறியுள்ளார். அதில், “கதாநாயகர்களுடன் நெருக்கமான காட்சிகள் நடிக்க நான் எப்போதும் ஒத்துக்கொள்ள மாட்டேன். அதேபோல, எனது பெற்றோரும் இதனை விரும்பமாட்டார்கள்.  இதன் காரணமாகவே பல படங்களை தவறவிட்டேன்.

ஒரு நடிகையாக எதற்கு தயாராக இருக்க வேண்டியது அவசியம் தான் ஆனால் என்னால் முடியாது. முக்கியமாக முத்தக்காட்சிகளில் நான் நடிக்கவே மாட்டேன். இதற்காகவே பல முக்கிய படங்கள் கை விட்டது சென்றது. இதுபோன்ற காட்சிகளில் நடிக்க எனக்கு பயமாக இருக்கும். 

ஆனால், எத்தனை நாட்களுக்கு இப்படி சொல்ல முடியும், ஒரு கட்டத்தில் நடிக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். இந்த மாதிரியான காட்சிகளை எனது பெற்றோருடன் அமர்ந்து பார்க்க முடியாது. இது எனது விருப்பமும் கிடையாது” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here