‘ஷாரூக்கானுடன் சேர்ந்து காதல் படங்களில் நடிக்க எனக்கு ஆசை’ – நடிகை மிருணாள் தாக்கூர்!

0
124

நடிகர் துல்கர் சல்மானுடன் சேர்ந்து நடித்து ‘சீதா ராமம்’ படம் மூலம் பிரபலமானவர் நடிகை மிருணாள் தாக்கூர். இவர், தெலுங்கு, ஹிந்தி மொழிப் படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், நடிகை மிருணாள் தாக்கூர் கூறுகையில், “காதல் படங்களை பார்த்து தான் வளர்ந்தோம்.

ஆனால் அப்படியான படங்கள் திடீரென வெளிவருவதில்லை. சிலர் தங்களுக்கு காதல் பிடிக்காது என கூறிவிட்டு காதல் படங்களை ரகசியமாக விரும்பி பார்க்கின்றனர். ‘சீதா ராமம்’, ‘ஹாய் நான்னா’ போன்ற காதல் படங்களில் நான் நடித்தது மகிழ்ச்சி.

ஹிந்தியிலும் காதல் படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். குறிப்பாக ஷாரூக்கான் உடன் சேர்ந்து நடிக்க ஆசைப்படுகிறேன். ஆனால், இது மாதிரியான வாய்ப்புகள் இதுவரை எனக்கு கிடைக்கவில்லை. ஒருவேளை அதுபோன்ற கதைகளில் நடிக்கும் அளவுக்கு நான் பிரபலமாகவில்லையா என நினைக்கிறேன்.

இதற்குமேல் என் நடிப்பு திறமையை ஹிந்தி இயக்குநர்களிடம் எப்படி வெளிப்படுத்துவது என தெரியவில்லை. அதில் நான் சோர்வடைந்துவிட்டேன்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here