‘இசைஞானி என்று அழைப்பதற்கு நான் தகுதியானவனா?’ – இளையராஜா பேச்சு!

0
80

Ilaiayaraja: சென்னை தியாகராயர் நகரில் நடந்த புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா, “நான் ஒரு சிவ பக்தர் என்றாலும், வைணவத்துக்கு எதிரி அல்ல.

திவ்யபிரபந்தத்தை ஒலிப்பதிவு செய்து வைத்துள்ளேன். சரியான தருணத்தில் அதனை வெளியிடுவேன். கர்நாடக இசையில் நாம் கரை கண்டவன் அல்ல மக்கள் என்னை இசைஞானி என்று அழைப்பதற்கு தகுதியானவனா? என்பது கேள்விக்குறிதான். எனக்கு எந்த கர்வமும் இல்லை. தற்போதைய இசையமைப்பாளர்களில் சிலர் பாடல் பதிவு செய்ய அதிக காலம் எடுத்துக்கொள்கின்றனர்.

நெருக்கடி காரணமாக 3 நாட்களில் 3 படங்களுக்கு நான் பின்னணி இசை அமைத்திருக்கிறேன். அப்படி இசையமைத்தவர்கள் உலகிலேயே கிடையாது. எனக்கு மொழி அறிவோ, இலக்கிய அறிவோ கிடையாது. என்னை எந்த புகழ் மொழியும், எந்தப் பாராட்டுகளும் சிந்திக்க வைக்காது” எனக் கூறினார்.

இதையும் படிங்க: விஜயகாந்த் நினைவிடத்தில் தேம்பி தேம்பி அழுத சூர்யா!..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here