ஜாபர் சாதிக் வழக்கு: இயக்குநர் அமீருக்கு சம்மன்..!

0
114

‘Ameer’: போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய வேதிப் பொருட்கள் வைத்திருந்த சென்னையைச் சேர்ந்த முகேஷ், முஜிபுர், விழுப்புரம் அசோக்குமார் ஆகிய மூன்று பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

தொடர்ந்து அவர்களிடம் இருந்து 2000 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் தயாரிக்க பயன்படும் 50 கிலோ வேதிப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த போதைப் பொருள்களை நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்பட்டு வருகிறது.

இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது தமிழ் சினிமா திரைப்படத் தயாரிப்பாளரும், திமுக பிரமுகருமான ஜாபர் சாதிக் என தெரியவந்தது. தொடர்ந்து தலைமைறைவாக இருந்த ஜாபர் சாதிக் இன்று கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவரிடம் என்.சி.பி. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், இந்த போதைப் பொருள் கடத்தலில் தமிழ் திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்களும் தொடர்பு இருப்பதாக ஜாபர் சாதிக் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

தொடர்ந்து, நடத்தப்பட்டு வரும் விசாரணைக்கு பிறகு இந்த போதைப் பொருள் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய தமிழ் திரைப்பிரபலங்களின் பெயர் வெளியாகும் என கூறப்படுகிறது. தொடர்ந்து, இதில் பாலிவுட் திரைப்பிரபலங்களும் ஈடுபட்டுள்ளனரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த வழக்கில் நேரில் ஆஜராகும்படி மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் இயக்குநர் அமீருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். மேலும், அதில் ‘வரும் 2ஆம் தேதி டெல்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளின் முன்பாக ஆஜராக வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here