‘எனக்கு லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் வேணும்’ – அடம்பிடித்த நயன்.. ஆசையை நிறைவேற்றிய விக்னேஷ்..!

0
104

Lady Superstar Nayanthara: தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர், 2003ஆம் ஆண்டு வெளியான ‘மனசினக்கரே’ என்ற மலையாள படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமாகினார்.

தொடர்ந்து, ‘ஐயா’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். திரைத்துறையில் பல ஏற்றம் இறக்கங்களைச் சந்தித்த நயன்தாரா, இதுவரை கிட்டத்தட்ட 80 படங்களில் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் ஷாருக்கான் ஜோடியாக நடித்த ‘ஜவான்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. ஹிந்தியில் நயன்தாரா முதல் முதலில் நடித்த திரைப்படம் ‘ஜவான்’. அறிமுகமான முதல் இந்தி படத்திலேயே நயன்தாரா பெரியளவில் பேசப்பட்டார்.

நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளன. குழந்தைகள், குடும்பம் என இருந்தாலும், தனது சினிமா பயணத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

சில நாட்களுக்கு முன்னர் நேர்காணலில் பேசிய நயன்தாரா, ரசிகர்கள் யாரும் இனிமேல் தன்னை ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என அழைக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார். இதனைக் கேட்ட ரசிகர்களும் நயன்தாரா பெருந்தன்மையாக நடந்துகொள்வதாக கூறி வந்தனர்.

இந்த நிலையில், தற்போது அந்த ‘லேடி சூப்பர் ஸ்டார்’ பட்டத்திற்கு பிறகு ஒரு சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘லேடி சூப்பர் ஸ்டார்’ பட்டத்தை மக்கள் யாரும் கொடுக்க வில்லை, அவராக தனக்கு இந்த பட்டம் வேண்டும் என கேட்டதாக கூறப்படுகிறது.

மேலும், தனது கணவர் விக்னேஷ் இயக்கும் படங்களில் மட்டும் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என பெயருக்கு முன்னள் பட்டம் இணைப்பதாகவும் வேறு படங்களில் யாரும் இந்த பட்டத்தை பயன்படுத்துவதில்லை எனவும் கூறப்படுகிறது.

ஆனால், தனது பெயருக்கு முன்னாள் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்தை போட சொல்லி நயன்தாராவே அழுத்தம் கொடுப்பதாகவும், இதற்கு சில நிறுவனங்கள் ஒத்துக்கொள்வதாகவும் பல நிறுவனங்கள் மறுத்துவிடுவதாகவும் கூறப்படுகிறது.

எஸ்.அர்.பிரபு தயாரிப்பில் நயன்தாரா நடித்தபோது, தனது பெயருக்கு முன்னாள் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ பட்டத்தை போட கூறி அழுத்தம் தெரிவித்தாகவும் இதற்கு தயாரிப்பு நிறுவனம் மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here