‘போட்டா போட்டி’ – திரிஷாவை தொடர்ந்து சம்பளத்தை உயர்த்திய நயன்தாரா..!

0
103

Nayanthara: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் திரிஷா. இவர், பொன்னியின் செல்வன், லியோ உள்ளிட்ட படங்களில் நடித்து தனது மவுஸை அதிகரித்துக்கொண்டார்.

தொடர்ந்து பல படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார். இதுவரை 7 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வந்த திரிஷா தற்போது புதிய படங்களில் நடிப்பதற்கு 12 கோடி ரூபாய் சம்பளம் கேட்டு வருகிறார்.

திரிஷா தனது சம்பளத்தை உயர்த்திவிட்டதை அறிந்த நயன்தாராவும் இனிமேல் நடிக்கவுள்ள புதிய படங்களில் 12 கோடி சம்பளம் கேட்டு வருவதாக சினிமா வட்டாரங்களில் கூறி வருகின்றனர்.

சமீப காலமாகவே நயன்தாரா நடிக்கும் படங்களுக்கு ரீச் கிடைப்பதில்லை. இறைவன், அன்னப்பூரணி போன்ற படங்கள் தோல்விப் படங்களாகவே அறிவிக்கப்பட்டது.

இதனால், நயன்தாராவுக்கு வரும் படங்களின் வரத்து குறைந்துவிட்டது. இந்த நிலையில் தற்போது நயன்தாரா தனது சம்பளத்தை உயர்த்தியிருப்பதால் மேலும் அவரது கெரியர் அடிவாங்க வாய்ப்புள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here