கனவை நனவாக்கிய நயன்தாரா.. புகைப்படங்களை பகிர்ந்து நெகிழ்ச்சி..

0
85

Nayanthara: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நயன்தாரா, சினிமா ஒரு பக்கம் பார்த்துக்கொண்டாலும் தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து பல பிசினஸ்களை செய்து வருகிறார். நயன்தாரா தற்போது லிப் பாம் நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார்.

மேலும், சென்னையை தளமாகக் கொண்ட ஸ்டார்ட் அப் சாய் வேலில் முதலீடு செய்திருக்கிறார். தோல் பராமரிப்பு பிராண்டான 9Skin, சானிட்டரி நாப்கின்கள் பிராண்ட் Femi9 மற்றும் சூப்பர் ஃபுட்ஸ் பிராண்டான ‘தி டிவைன் ஃபுட்ஸ்’ ஆகியவற்றில் முதலீடு செய்து தனது தொழிலை சிறப்பாக ஆரம்பித்துள்ளார்.

தொடர்ந்து, தனது பிராண்டுகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார். சமீபத்தில் ஸ்லைஸ் (Slice) நிறுவனத்தின் பிராண்ட் தூதராக நடிகை நயன்தாரா நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில், தற்போது போயஸ் கார்டனில் வாங்கியுள்ள தனது வீட்டின் மொட்டை மாடியில் கனவு அலுவலகத்தை கட்டி வருவதாக நயன்தாரா புகைப்படத்துடன் தனது இன்ஸ்டாவில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “எனது கனவு அலுவலகம் உருவாகிவருகிறது. இதனை, 30 நாட்களுக்குள் உருவாக்கி கொடுத்தவர்களுக்கு நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here