மோலிவுட் படத்தில் கமிட்டான நயன்தாரா.. ஹீரோ யார் தெரியுமா?

0
107

Nayanthara New Movie: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நயன்தாரா, தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘ஜவான்’ படத்தின் மூலம் பாலிவுட் படத்தில் அறிமுகமானார். இந்நிலையில் தற்போது மோலிவுட் படத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார்.

பிரபல மலையாள நடிகரான நிவின் பாலி நடிக்கும் புதிய படத்தில் நயன்தாரா நடிக்க இருக்கிறார். ஏற்கனவே 2019ஆம் ஆண்டு வெளியான ‘லவ் ஆக்சன் டிராமா’ படத்தில் நிவின் பாலியுடன் இணைந்து நடித்திருப்பார். இந்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாக இருவரும் இணைந்து நடிக்கவுள்ளனர்.

ஜார்ஜ் பிலிப்ஸ் ராய் மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் இயக்கும் இந்த படத்திற்கு ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நயன்தாரா ஆசிரியராக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here