Neel Nanda: பிரபல ஸ்டாண்டப் காமெடியன் நீல் நந்தா காலமானார்!

0
159

RIP Neel Nanda: ஜிம்மி கிம்மல் லைவ் மற்றும் காமெடி சென்ட்ரலின் ஆடம் டிவைனின் ஹவுஸ் பார்ட்டி ஆகிய நிகழ்ச்சிகளின் மூலம் அங்கீகாரம் பெற்ற பிரபல ஸ்டாண்டப் காமெடியன் நீல் நந்தா காலமானார்.

அமெரிக்க மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்தவர் ஸ்டாண்ட் அப் காமெடியன் நீல் நந்தா (32). இவர், இன்று காலமானதாக அவரது நீண்டகால மேலாளர் கிரெக் வெய்ஸ் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

இது குறித்து அவர் கூறுகையில்,“ துரதிர்ஷ்டவசமாக 11 ஆண்டுகாள எனது நண்பர் இறந்துவிட்டார். நந்தா ஒரு சிறந்த நகைச்சுவையாளர் அவர் ஒரு நல்ல நண்பர் மற்றும் அற்புதமான மனிதர்” எனத் தெரிவித்துள்ளார்.

காமெடியன் நந்தாவின் இறப்புக்கான காரணம் இன்னும் வெளிவரவில்லை. அவரது இறப்பு செய்தியைக் கேட்ட அவரது நண்பர்கள், நடிகர்கள், ரசிகர்கள் அனைவரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

நந்தாவின் இறப்பு குறித்து ஜோக்கர்ஸ் தியேட்டர் & காமெடி கிளப்பின் உரிமையாளர் டேவ் கர்ரன் கூறுகையில், “அவர் எங்கள் பார்வையாளர்களை மகிழ்ச்சிப்படுத்தினார். நான் அவரை ஆறு மாதங்களுக்கு முன்புதான் சந்தித்தேன், ஆனால் அவருடன் நாம் பல ஆண்டுகளாக பழகிவருவதுபோல நம்மை மாற்றிவிடுவார்” என்றார்.

இதையும் படிங்க: அமீர் இயக்கும் ‘இறைவன் மிகப்பெரியவன்’ பர்ஸ்ட் லுக் வெளியீடு!.. இந்த டைட்டிலுக்கும் பிரச்சினையா?..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here