‘லியோ படத்தை நான் இயக்கி இருந்தால் இவர் தான் ஹீரோ’.. நெல்சன் பதிலால் ஆடிப்போன ரசிகர்கள்..

0
129

Director Nelson: தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் நெல்சன் திலீப் குமார். இவர்,  ‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் பிரபலமடைந்த நிலையில், ‘டாக்டர்’ படத்தின் மூலம் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

தொடர்ந்து, ‘பீஸ்ட்’ படத்தின் மூலம் மாஸ் இயக்குநர்கள் லிஸ்ட்டில் இடம்பெற்றார். அதனைத் தொடரந்து தலைவரை வைத்து இயக்கிய ‘ஜெயிலர்’ படத்தின் மூலம் பான் இந்திய அளவில் பேசப்படும் இயக்குநராக மாறினார்.

ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து தற்போது அவர் ஜெயிலர் 2 படத்தின் கதையை தயார் செய்து வருவதாகவும் கூடிய விரைவில் இந்த படத்தின் அப்டேட்டுகள் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றியே இந்த இரண்டாம் பாகத்தை எடுக்க காரணமாக இருப்பதாக நெல்சன் கூறியிருந்தார்.

மேலும், இந்தப் படம் வெளியாகி உலகளவில் ரூ.650 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த நிலையில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தற்போது லியோ படம் குறித்து பேசியிருக்கிறார்.

சமீபத்தில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் நெல்சன் பங்கேற்றார். அப்போது அவரிடம் “நீங்கள் லியோ படத்தை எடுத்திருந்தால் யாரை ஹீரோவாக நடிக்க வைத்திருப்பீர்கள்?” என கேள்வி கேட்கப்பட்டது. 

சற்று யோசித்த நெல்சன், “நான் லியோ படத்தை எடுத்திருந்தால் விஜய்யுடன் சேர்த்து ஷாருக்கான், மம்மூட்டி, மகேஷ் பாபு உள்ளிட்டோரை நடிக்க வைத்திருப்பேன். படத்தில் கதாநாயகிகளாக நயன்தாரா, ஆலியாபட் ஆகியோரை தேர்ந்தெடுத்து இருப்பேன்” என பதில் அளித்துள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here