‘KH 233’ படம் வருமா? வராதா?.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த படக்குழு..!

0
145

‘KH 233’: நடிகர் கமல் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பல முன்னனி நடிகர்கள் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் ‘கல்கி 2898 ஏ.டி’ படத்தில் கமல் நடிக்கிறார். இப்படத்தில் பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன், திஷா பதானி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து கமலின் 234ஆவது படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்குகிறார். ‘தக் லைப்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் நடிகை திரிஷா, நடிகர்கள் துல்கர் சல்மான், ஜெயம்ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.

இதற்கிடையே கமல்ஹாசனின் 233ஆவது படத்தை, ஹெச்.வினோத் இயக்க உள்ளதாக ‘ராஜ் கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ நிறுவனம் கடந்த வருடம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. இந்த படம் அரசியல் சம்பந்தமான கதைகளத்தில் உருவாக இருப்பதாகவும் கூறப்பட்டது.

ஆனால் இந்த படம் கைவிடப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. சமீபத்தில் படத்தின் தயாரிப்பு நிறுவனம், அவர்கள் தயாரிக்கும் படங்களின் பட்டியலை வெளியிட்டிருந்தது. அதில் ‘கமல்-233’ படத்தின் பெயர் இடம்பெறாததால் ரசிகர்கள் குழப்பமடைந்தனர்.

இந்த நிலையில், தற்போது KH233 படம் விரைவில் நடைபெறும் எனவும் அதற்கான ஏற்பாடுகள் தயார்செய்யப்பட்டு வருவதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனால், கட்டாயம் ஹெச்.வினோத் மற்றும் கமலின் கூட்டணியில் படம் வெளியாகும் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here