‘ரொமான்ஸ் சீன் மட்டும் இல்லைனா நானும் ஹீரோயினியா நடிப்பேன்’- நிகிலா சங்கர்!

0
129

Nikhila Sankar: யூடியூப் மற்றும் வெப்சிரிசில் நடத்ததன் மூலம் கிடைத்த வரவேற்பால் ‘பயணிகள் கவனிக்கவும்’, ‘மாநாடு’, ‘கட்டாகுஸ்தி’, ‘குட்நைட்’, ‘லவ்வர்’ போன்ற பல படங்களில் முக்கிய கதாபாரத்திரங்களில் நடித்தவர் நிகிலா சங்கர்.

இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், “2020ஆம் ஆண்டு காலக்கட்டங்களில் இஸ்ரேலில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்து கொண்டிருந்தேன். விடுமுறை காலங்களில் வீட்டிற்கு வந்தபோது முதல் முறையாக யூடியூப் சேனலுக்காக குறும்படம் ஒன்றில் நடித்தேன்.

அதன்பிறகு வெப் சீரிசில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து பல படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தேன். அப்போது தான் ‘கட்டாகுஸ்தி’ படத்தில் கதாநாயகிக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்தேன்.

அதன் மூலம் மக்கள் என்னை அடையாளம் காண ஆரம்பித்தனர். ‘குட்நைட்’ படத்தில் ஹீரோவுக்கு தோழியாக, ‘லவ்வர்’ படத்திலும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அடுத்ததாக அர்ஜூன் தாஸ் நடிக்கும் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறேன்.

எனக்கும் சினிமாவில் கதாநாயகியாக நடிக்க ஆசையாக தான் இருக்கு. அதற்கான வாய்ப்புகளும் வருகின்றன. ஆனால், எனக்கு ரொமான்ஸ் செய்வது போன்ற காட்சிகளில் நடிக்க விருப்பமில்லை. அந்த காட்சிகள் இல்லாமல் ஏதாவது படம் வந்தால் கட்டாயம் கதாநாயகியாக நடிப்பேன்.

நடிப்பு மட்டுமில்லாமல் டப்பிங்கிற்கும் வாய்ப்புகள் வருகின்றன. தேன் சுடரே எனும் வெப்சீரிசை ‘நானே இயக்கி’ நடிக்கிறேன். என் மீதும் ரசிகர்கள் கொஞ்சம் பாசம் வைத்திருக்கின்றனர். இதன் மூலம் எனது அப்பா, அம்மாவுக்கு நான் பெருமை சேர்த்துள்ளேன்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here