ராமர் கோவில் பூஜைக்கு தமிழ்நாட்டில் தடை.. ‘இந்து விரோத, வெறுக்கத்தக்க செயலை வன்மையாக கண்டிக்கிறேன்’ – நிர்மலா சீதாராமன் ஆவேசம்..!

0
81

உத்திரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் நாளை ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் நிலையில் அதனை முன்னிட்டு தமிழ்நாட்டில் கோவில்களில் அன்னதானம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்ய தமிழ்நாடு அரசு தடை விதித்து வாய்மொழி உத்தரவு பிறப்புத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ‘X’ தளத்தில் பதிவு இன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஜனவர் 22ஆம் தேதியன்று நடைபெறும் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது.

தமிழ்நாட்டில் ஸ்ரீராமருக்கு 200க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. இந்திய சமயம் அறநிலையத்துறையால் நிர்வகிக்கப்படும் கோவில்களில் ஸ்ரீ ராமரின் பெயரில் பூஜை, பஜனை, பிரசாதம், அன்னதானம் அனுமதிக்கப்படுவதில்லை.

தனியாருக்குச் சொந்தமான கோவில்களில் நிகழ்ச்சிகளை நடத்துவதையும் காவல் துறையினர் தடுத்து வருகின்றனர். பந்தல்களை கிழித்து விடுவோம் என அமைப்பாளர்களை மிரட்டுகின்றனர். இந்த இந்து விரோத, வெறுக்கத்தக்க செயலை வன்மையாக கண்டிக்கிறேன்”எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ராமர் கோவில் கும்பாபிஷேகம்: அயோத்திக்கு புறப்பட்ட ரஜினிகாந்த்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here