Odela 2: இயக்குநர் அசோக் தேஜா இயக்கத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு ஓடிடியில் வெளியான கிரைம் திரில்லர் தொடர் ‘ஒடேலா ரயில்வே ஸ்டேஷன்’. இந்த கதையை சம்பத் நந்தி எழுதினார்.
தற்போது அதன் தொடர்ச்சி ‘ஒடேலா 2’ என்ற பெயரில் புதிய தொடர் உருவாகிறது. இந்த தொடரில் நடிக்க நடிகை தமன்னா ஒப்பந்தமாகியுள்ளார். இந்த தொடருக்கான படப்பிடிப்பு சமீபத்தில் வாராணாசி பகுதியில் தொடங்கியது.
இந்த நிலையில், தற்போது இந்த தொடர் குறித்த புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, ‘ஒடேலா 2’ படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை வெளியாகவுள்ளாதாக படக்குழு அறிவித்துள்ளது.
இது குறித்த அதிகாரப்பூர்வமான போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், ‘ஒடேலா 2’ படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை காலை 10:04 மணிக்கு வெளியாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
‘ஒடேலா 2’ தொடர் ஹிந்தி மொழியில் கிராமிய பின்னணியில் உருவாகும் இந்த தொடர் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் வெளியாக இருக்கிறது.